Tamilnadu
“சுப்பிரமணியன் சுவாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” : சிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பத்மா சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை கலைப்பேன் என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளிஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என எச்சரிக்கை விடும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பத்மா சேஷாத்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை கலைப்பேன் என்று கூறிய பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். சமூக வலைதளங்களில் பலரும் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!