Tamilnadu
சட்டம் ஒழுங்கை காக்க Hello Police திட்டம் அறிமுகம் - கைபேசி எண் வெளியிட்ட செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள தனமாக மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்கலாம் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் “ஹலோ போலீஸ் ” என்ற ஒரு புதிய கைப்பேசி எண் பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது,
பொதுமக்கள் தங்கள் பகுதியில் எந்த ஒரு குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் உடனடியாக, 7200102104 என்ற கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது S M S / Whats app மூலமாகவும் தொடர்புகொண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி