Tamilnadu
“ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும்” : ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 136 படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அந்த நிகழ்ச்சியில் கடந்துக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நோய் பாதிப்பு குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா தொற்று இல்லாத 4 ஆயிரம் பேரின் முடிவுகளை தொற்று உடையவர்கள் என மாற்றி அறிவித்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட தனியார் ஆய்வகத்திடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும், இந்த தவறை அவர்களே முன்வந்து கூறியிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள தனியார் பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என்றும் கூறினார்.
அதுமட்டுமல்லாது, 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருப்பதாகவும், கொரோனா நேரத்தில் மக்கள் அத்தியாவசிய பணியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுவதாகவும் தெரிவித்தார்.
Also Read
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!
-
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டி கொலை : கம்மல் கொள்ளை - நாகர்கோவில் அருகே கொடூரம்!
-
“கரூரில் 41 பேரைக் கொன்ற பாவத்தின் தொடர்ச்சிதான் இது” : முதல்வர் விஜயின் வஞ்ச எண்ணத்தை தோலுரித்த முரசொலி!