Tamilnadu
“கொரோனா தொற்று இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகான முதல் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதில் மகிழ்ச்சி. தி.மு.கவிற்கு பெரும்பான்மை வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி.
வெற்றிச் செய்தி வந்த போதும் கொரோனா பரவைலைத் தடுப்பது குறித்தே ஆலோசித்தேன். தமிழ்நாட்டில் தடுப்பூசி உற்பத்திக்கு உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தி தொடங்கும்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நிபுணர் குழு, அனைத்துக் கட்சி உறுப்பினர் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 25 கோடி மருந்து வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 34,000 பேருக்கு நாளொன்றுக்கு தொற்று ஏற்படுகிறது. ஊரடங்கால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் கொரோனா தடுப்பு எனும் சவாலான பணியில் ஈடுபட்டுள்ளோம். போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சி அமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெற்றி பெற்றதை விட கொரோனா தொற்று இல்லாத நாளே மகிழ்ச்சியான நாள். 24 மணி நேர பொது முடக்கம் இருந்தால்தான் கொரோனா பரவல் கட்டுக்கள் வரும் என்றெல்லாம் சொல்கிறார்கள். பொது முடக்கம் நீட்டிப்பு குறித்து நாளைய தினம் நடைபெறும் நிபுணர்கள் குழு, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
தடுப்பூசி ஒதுக்கீடு, ஆக்சிஜன் விநியோகத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. நிலைமை சரியானதும் டெல்லியில் பிரதமரைச் சந்தித்து தமிழகத்தின் உரிமைகளை கேட்டுப் பெறுவோம். ஜூன் 3-ம் தேதிக்குள் இரண்டாம் தவணை கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!
-
”இந்திய இளைஞர்கள் உருவாக்கிய ’காக்ரோச் ஜனதா கட்சி’ - CJP.. அதிரவைக்கும் காரணங்கள்” - முழு விவரம் அறிக!