Tamilnadu
“கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் விலை குறைக்கப்பட்ட ஆவின் பால் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பால் விலையைக் குறைத்து தமிழக மக்களின் வயிற்றில் முதலமைச்சர் பால்வார்த்திருக்கிறார். அரசு நிர்ணயித்திருக்கும் விலையை விட கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் ஆவின் பால் விற்பனையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் சேவையே எங்களுக்கு முக்கியம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!