Tamilnadu
சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர், கண்டெய்னர்கள் இறக்குமதி: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்காகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேமித்து வைக்க போதிய சிலிண்டா்கள் மற்றும் கண்டெய்னா்கள் இல்லை என்பதால் இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜொ்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்கள் 2 விமானங்களில் சென்னை வந்தடைந்தன. பின்னர் இவற்றை ,ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்கத் தற்காலிகமாக 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேகரித்து வைக்க போதிய சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் இல்லை என்பதால், தமிழக அரசு சிங்கப்பூர் அரசிடம் காலி சிலிண்டா்கள், கண்டெய்னா்களை வழங்கி உதவுமாறு கோரிக்கை வைத்திருந்தது.
இதனையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சிங்கப்பூரிலிருந்து 128 காலி சிலிண்டா்கள் மற்றும் காலி கண்டெய்னா்களை ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்று இரவு 10 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்தது. இதையடுத்து மேலும் 128 காலி சிலிண்டா்களுடன் மற்றொரு இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமானநிலையம் வரவுள்ளது.
பின்னர் விமானப் படை அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் 256 காலி சிலிண்டா்கள், கண்டெய்னா்கள் ஒப்படைத்தனர். அதன்பின்பு காலி சிலிண்டா்கள் மற்றும் கண்டெய்னா்களை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டா்கள் இன்று இரவும் மேலும் 2 விமானங்களில் சென்னைக்கு வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!