Tamilnadu
தலைநகரை முழுமையாக கைப்பற்றும் தி.மு.க: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 17,476 வாக்குகள் முன்னிலை! #DMK
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கானன வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணி 142 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.கவில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் உள்ள 16 தொகுதியிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்றுவருகின்றனர். இதன் மூலம் தலைநகரை தி.மு.க முழுமையாகக் கைப்பற்றவிருக்கிறது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எட்டு சுற்றுகளின் முடிவில் அ.தி.மு.க வேட்பாளரை விட 17,476 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 16,819 வாக்குகள் வித்தியாசத்தில் முனனிலையில் உள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றியழகன் 5067 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் தியாகராய நகர் தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதி 20198 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவருகிறார்.
எழுப்பூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 9450 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் வகித்துவருகிறார். மயிலாப்பூர் தி.மு.க வேட்பாளர் த.வேலு 13960 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எபினேசர் 12351 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல், ராயபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி, அமைச்சர் ஜெயக்குமாரை விட 4177 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் 13279 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !