திமுக அரசு

தொடர் பின்னடைவு... யார் வந்து முட்டுக் கொடுத்தாலும் தூக்கி நிறுத்த முடியாத நிலையில் தமிழக பா.ஜ.க!

பா.ஜ.க வேட்பாளர்கள் பலரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி முகம் கண்டு வருகிறார்கள்.

தொடர் பின்னடைவு... யார் வந்து முட்டுக் கொடுத்தாலும் தூக்கி நிறுத்த முடியாத நிலையில் தமிழக பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணி வகித்து வருகின்றனர்.

பா.ஜ.க வேட்பாளர்கள் பலரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி முகம் கண்டு வருகிறார்கள்.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, தி.மு.க வேட்பாளர் ஆர்.இளங்கோவிடம் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க-வின் குஷ்பூ, தி.மு.க வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

காரைக்குடி பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை விட 8134 வாக்குகள் குறைவாகப் பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் பொன்.ராதாகிருஷ்ணன், காங் வேட்பாளர் விஜய் வசந்த்தை விட 60 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

இதுபோல, பா.ஜ.க-வின் முக்கிய வேட்பாளர்கள் பலரும், அவரவர் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களிடம் தோல்வி முகம் காட்டி வருகின்றனர்.

தமிழர் விரோதப் போக்கால் தமிழ்நாட்டு மக்களிடையே வெறுப்பைப் பரப்பி வரும் பா.ஜ.கவிற்கு இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories