Tamilnadu
தமிழகத்தில் உச்சகட்ட பரவல்: இன்று 10,986 பேருக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 48 பேர் பலி! #CovidUpdates
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலால் பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் முதன்முறையாக 1,000-ஐ கடந்துள்ளது தினசரி பாதிப்பு.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,378 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 99,246 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,10,56,094 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 3,711 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,90,364 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,029 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 686 பேருக்கும், திருவள்ளூரில் 508 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 39 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 6,250 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,20,369 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 79,804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 48 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 26 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 22 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,205 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!