Tamilnadu
செவிலியர்கள் பணிநீக்கம்: வெற்றிநடை போட்ட சாதனை இதுதானா? விடியலுக்கு காத்திருப்போம் - டாக்டர்கள் சங்கம்
தொகுப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வந்த செவிலியர்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பணி நீக்கம் செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது சமூக சமத்துவத்திற்காக மருத்துவர்கள் சங்கம்.
இது தொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் மருத்துவருமான ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-
“முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ், நீண்ட காலம் பணிபுரிந்த ஐம்பது செவிலியர்களை பணி நீக்கம் செய்தது கடும் கண்டனத்திற்குரியது.
இவர்கள் மாதம் ரூ 7000 தொகுப்பூதியத்தில் ரீடு என்ற ஏஜன்சி மூலம் பணி அமர்த்தப்பட்டுள்ளார்கள். கடந்த 2 மாதமாக இந்த ரூ 7000 தொகுப்பூதியம் ரூ 14000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. இப்பொழுது பணிநீக்கம் நடைபெற்றுள்ளது.
இவர்கள் கடந்த 8 மாதங்களாக கொரோனா வார்டில் பணியாற்றியுள்ளனர். இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது அவர்கள் வேலையை இழந்துள்ளனர்.
"கொரோனா வேலை பார்த்து 7 கிலோ எடை குறைந்துவிட்டேன்" என வாக்காளர்களிடம் வாக்களிக்கக் கோரி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கெஞ்சிக் கூத்தாடினார்.
ஆனால், கொரோனா வார்டில் பணியாற்றிய 50 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாரிடம் புலம்புவது? DMS துறையிலிருந்து DME துறைக்கு சில மருத்துவமனைகள் மாற்றப்பட்டதால் , நீண்டகாலமாக பணியாற்றி வந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்வது என்ன நியாயம்? இதுதான் வெற்றி நடை போட்ட தமிழக அரசின் வீரமிகு சாதனையா? மனித நேயமற்ற இந்த செயலை கண்டிக்க, வார்த்தைகள் போதாது.
இந்த செவிலியர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த செவிலியர்களையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும். வருகின்ற புதிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்களின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டும்.
அவர்களின் வாழ்வில் விடியலை உருவாக்க வேண்டும்.
விடியல் வரும் என நம்புவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?