Tamilnadu
தமிழகத்தில் குவியும் மருத்துவ கழிவுகள் : மக்கள் நலனில் அக்கறை காட்டாத எடப்பாடி அரசு - பொதுமக்கள் ஆவேசம்!
அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த பின்பு வெளியேற்றப்படும் சிரிஞ்சுகள், ஊசிகள், மற்றும் சீழ் துடைக்கப்பட்ட பஞ்சுகள், கையுறைகள் அனைத்தும் மருத்துவக்கழிவு எனப்படுகிறது.
இம்மருத்துவக்கழிவுகளில் காலாவதியான மருந்துகள், வேதிப் பொருள் கழிவுகள், ஆய்வகக் கழிவுகள் மஞ்சள் நிறப் பையிலும், கெட்டுப்போன மருந்துப் பொருள்கள், ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்ச், கையுறைகள் சிவப்பு நிறப் பைகளிலும், கத்தி, உடைந்த கண்ணாடி போன்றவை வெள்ளை நிற பைகளிலும், கண்ணாடிப் பொருள்கள், மரப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிறப் பெட்டிகளிலும் நான்கு விதமாகத் தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது.
இந்த கழிவுகளை ஒப்பந்த நிறுவனங்கள் மருத்துவ மனைகளில் பெற்றறுக் கொண்டு ட்ரீட்மென்ட் பிளான்ட்களில் இன்சின ரேட்டர், மைக்ரோவேவ்ஸ் போன்ற எரிப்பான்கள் மூலம் உயர்வெப்ப நிலையில் எரித்தல் முறையிலும், மறு சுழற்சி முறையிலும், ஆழப் புதைப்பதன் மூலமும் அழிக்கப்படுகிறது.
ஆனால் பல தனியார் மருத்துவமனைகள் இவ்விதிகளை பின் பற்றாமல் தங்கள் மருத்துவமனையில் பயன்படுத்திய ஊசி, ஊசி நீக்கப்பட்ட சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள்களை கொட்டி விடுகின்றனர். காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் ஊசி, சிரிஞ்சு, மருந்து பாட்டில்கள் அடங்கிய மருத்துவ குப்பை கழிவுகள், காஞ்சிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் இருபுறமும் குப்பை கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது.
மருத்துவக்கழிவுகள் வெளியே கொட்டுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தப்பேட்டை ஏரிக்கரை ஓரத்தில் கொட்டப்படும் இந்த மருத்துவக் கழிவுகளினால் பறவைகளும், பன்றி, நாய், பசு, போன்ற கால்நடைகளும் பெருமளவில் பாதிப்படைகின்றன.
மருத்துவக் கழிவுகளை பொதுக் குப்பையோடு சேர்ப்பதால் இக்குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு நோய்கள் பரவும் வாய்ப்பும் அதிகம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இதேப்போன்று தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலன தனியார் மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை முறைய அப்புறப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Also Read
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !