Tamilnadu

பல்வேறு இடங்களில் கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க-பா.ஜ.கவினர் : வாக்காளர்கள் ‘பகீர்’ குற்றச்சாட்டு!

தமிழகசட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாகக் காலை 7 மணியிலிருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில், வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்த அவலநிலையும் ஏற்பட்டது.

மேலும் தோல்வி பயத்தில் இருக்கும் அ.தி.மு.க, பா.ஜ.வினர் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருவதோ கள்ள ஓட்டுகளைப் போட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வாக்களிப்பதற்காக வந்துள்ளார். அப்போது வாக்குச்சாவடியில் இருக்கும் அதிகாரிகளிடம் தனது பெயரைக் கூறி, அடையாள அட்டையைக் காண்பித்தபோது, நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரது வாக்கை அ.தி.மு.கவினர் கள்ள ஓட்டுப் போட்டது தெரியவந்துள்ளது.

அதேபோல் சென்னை ஆர்.கே.நகரில் ரமேஷ் என்பவரது வாக்கை தபால் வாக்காக ஆளுங்கட்சியினர் போட்டுள்ளனர். மேலும் மதுரை கருப்பாயூரணியில் சாந்தி என்பவரது வாக்கையும் மற்றொருவர் செலுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் ஒரே நபர் 3 முறை வாக்களித்ததால் அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகம் தொகுதியில் சவுகார்பேட்டையில் இருந்து வடமாநிலத்தவர்களை வரவழைத்து கள்ள ஓட்டு போட பா.ஜ.க முயற்சி செய்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Also Read: “எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் இரட்டை இலை - தாமரைக்கு வாக்குகள் பதிவு?” : வாக்காளர்கள் குற்றச்சாட்டு !