Tamilnadu
“தேர்தல் நேரத்தில் பா.ஜ.கவின் பூச்சாண்டி வேலைக்கெல்லாம் தி.மு.க பயப்படாது” : துரைமுருகன் பேச்சு!
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், வேட்பாளர்களின் பிரச்சார பரப்புரைகள் சூடுபிடித்துள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.
அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் செல்லுமிடமெல்லாம் மக்கள் ஊழல் அ.தி.மு.கவையும், மதவெறி பா.ஜ.கவையும் வீழ்த்துவது உறுதி என்பது கண்கூடாக தெரிகிறது. தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.
இந்த நிலையில், நாட்டில் தேர்தல் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தி.மு.க வேட்பாளர் மற்றும் முக்கிய பொறுப்பாளர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையிடு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் விதி முறைகளுக்கு மாறாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளது. தி.மு.க.வுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது என்பது மிக அப்பட்டமாகத் தெரிகிறது என தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வருமான வரித்துறையினரின் இந்த சோதனைக்கு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய துரைமுருகன், “தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பா.ஜ.க கூட்டணியின் தோல்வி பயத்தின் விளைவு என்பதை காட்டுகிறது.
இது ஜனநாயகமான போக்கு அல்ல; நாணயமான அரசியல் அல்ல. தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட பூச்சாண்டி வேலைகள் காட்டுவதால் தி.மு.க பயப்படாது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இத்தகைய ரெய்டுகளுக்கு தி.மு.க பயந்து இருந்தால் என்றைக்கோ காணாமல் போய் இருக்கும். அடக்குமுறை, சிறைத்தண்டனை போன்றவற்றுக்கு தி.மு.க அஞ்சாது. தி.மு.க கலகலத்துவிடும் என்று நினைப்பது அப்பாவித்தனம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தி.மு.க மேலும் வலுப்பெறும். தி.மு.கவை மிரட்டலாம் என மத்திய அரசு நினைத்தால் அதைவிட அரசியல் அப்பாவித்தனம் வேறு ஒன்றுமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!