Tamilnadu
“வாக்கு கேட்டு வாங்க; ஆனா இதை செஞ்சிட்டு வந்து பேசுங்க” -அதிமுக கூட்டணிக்கு எதிராக பேனர் வைத்த விவசாயிகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், வேட்பாளர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க அரசு விவசாயிகளுக்கு ஆதரவான அரசு, நானே விவசாயிதான், விவசாயிகளின் வேதனை எனக்கு நன்றாக தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
இவரின் இந்த பேச்சைக் கேட்ட விவசாயிகள், 10 ஆண்டுகால ஆட்சியில் விவசாயிகளுக்கான என்ன செய்தீர்? , விவசாயியின் பாதுகாவலன் என்றால் அப்போது ஏன் வேளாண் சட்டங்களை ஆதரித்தீர் எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வீட்டு வாயிலில் அ.தி.மு.க கூட்டணியை எதிர்த்து பேனர் வைத்துள்ளார். அதில், "பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி நண்பர்களே, என் விவசாயத்தை அழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார சட்டத் திருத்தத்தை, காங்கேயம் மாடுகளை அழிக்க வகை செய்யும் கால்நடை இனப்பெருக்க சட்டத்தை ரத்து செய்த பின் என்னிடம் வாக்கு கேட்க வாருங்கள். இப்படிக்குத் தமிழக விவசாயிகள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன. அ.தி.மு.க, பா.ஜ.க மீது விவசாயிகளும், பொதுமக்களும் தங்கள் எதிர்ப்புகளை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருவது தி.மு.கவின் வெற்றியை உறுதி செய்யும் விதமாகவே உள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!