Tamilnadu
“தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டுமென்றால் திமுகவே உரிய தேர்வு” - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி!
தமிழகத்தின் கல்வி உரிமையை பாதுகாத்திட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதன் விவரம் பின்வருமாறு:-
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் 6 வயது முதல் 11 வயதுள்ள குழந்தைகள் தொழிற் கல்வி பயில கட்டாயப்படுத்தப்படும் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவால் என்றும் அவர் கூறினார்.
நீட் தேர்வை திணித்துள்ளதன் மூலம் கல்வியில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய பிரின்ஸ் கஜேந்திரபாபு, நீட் தேர்வை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
கல்வியில் மாநிலத்திற்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் திராவிட முன்னேற்ற கழகத் தேர்தல் அறிக்கையில் மாநிலத்திற்கான கல்வி உரிமை பாதுகாக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறிய அவர், மாநில உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரும் தேர்தலில் தமிழக மக்கள் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!