Tamilnadu

கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் மதுரை தொழிலாளி தற்கொலை; சம்பவத்தை மூடி மறைக்க அதிமுகவினர் மிரட்டல்!

மதுரை மாவட்டம், பந்தடி 5வது தெருவில் வசித்து வந்தவர் விஜயகுமார். அவரது மனைவி வாணி. இவர்களது ஒரே மகள் ஹாசினி. விஜயகுமார் நகை செய்யும் தொழில் செய்துவந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக விஜயகுமாரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் கந்து வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் நடத்தியுள்ளார். விஜயகுமாருக்குக் கடன் கொடுத்தவர்கள் அதிக வட்டி கேட்டு நெருக்கடி தந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த விஜயகுமார் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குழந்தை ஹாசினிக்கு விஷம் கொடுத்துவிட்டு, விஜயகுமார் மற்றும் வாணி ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது, சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என போலிஸாருக்கு ஆளுங்கட்சி தரப்பினர் உத்தரவு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கந்துவட்டி கொடுமையால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “புடவை கேட்டு கரையானைப் போல அரிக்கிறார்கள்”: சொந்த தொகுதி மக்களைக் கொச்சைப்படுத்து பேசிய அதிமுக நிர்வாகி!