Tamilnadu
“அபாயகட்டம் மீண்டும் திரும்புகிறதா?” - 13 நாட்களில் 156% அதிகரித்த கொரோனா பாதிப்பு... இன்று 11 பேர் பலி!
தமிழகத்தில் அ.தி.மு.க அரசின் மெத்தன நடவடிக்கைகளால் மீண்டும் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை 500க்கும் குறைவாக தினசரி பாதிப்பு பதிவாகிவந்த நிலையில், இந்த வாரம் தினசரி பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 13 நாட்களில் கொரோனா பாதிப்பு 156% அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,779 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,73,219 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 80,761 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,87,71,192 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 664 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,43,954 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 153 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 37 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 1,027 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,50,091 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 10,487 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,641 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !