Tamilnadu
“மு.க.ஸ்டாலின் முதல்வராகப்போகிறார்.. இனி தமிழகத்திற்குப் பொற்காலம்” : தி.மு.க-வில் இணைந்த கோவை தங்கம்!
த.மா.கா துணைத்தலைவர் கோவை தங்கம், சேலம் வந்திருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகளும் தி.மு.கவில் இணைந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, த.மா.கா துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை தங்கம், அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்திருந்தார். இது அ.தி.மு.க கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை தங்கம், தேர்தல் பரப்புரைக்காக சேலம் வந்திருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அவருடன் த.மா.கா மாநில பொது செயலாளர் ஞானசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மத்திய மாவட்ட தலைவருமான அன்பழகன், மாநில செயலாளர்கள் ஆனந்த் குமார், ராஜ்குமார், அ.தி.மு.கவை சேர்ந்த சூலூர் சட்டமன்ற தொகுதி அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ராஜேந்திரன், அ.ம.மு.க மாநில சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் மருத்துவர் தாராவி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தங்கம், “தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டக் குணமும், மக்களை நேசிக்கும் தன்மையும் கொண்டவர். எதிர்வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உறுதி.
தமிழகத்தின் வளர்ச்சிக்கும், ஊழலற்ற ஆட்சியைத் தரவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாடுபடுவார் என்ற நம்பிக்கையில் தி.மு.க-வில் இணைந்துள்ளோம். மக்கள் பணிகளைச் செய்வதற்குக் காத்திருக்கிறோம். வரும் காலம் தமிழகத்திற்குப் பொற்காலம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!