Tamilnadu

“ஜெயலலிதா இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி இருந்தாரா என்றே தெரியாது” : ப.சிதம்பரம் சாடல் !

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு, கட்சித் தலைவர்களின் பிரச்சாரம், செயல்வீரர்கள் கூட்டம் என தமிழக தேர்தல் களைகட்டியுள்ளது.

இந்நிலையில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்று,தமிழ் மொழி மற்றும் தமிழினத்திற்கு முழுவிரோதி பா.ஜ.க என கடுமையாகச் சாடியுய்யார்.

இந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், “பா.ஜ.க மற்ற மாநிலங்களில் சில்லரையாக எம்.எல்.ஏ-களை வாங்கினார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான் ஒரு கட்சியையே வாங்கிவிட்டனர். பா.ஜ.கவிடம் முதல்வரும், துணை முதல்வரும் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டனர்.

அ.தி.மு.க அரசு நான்கு ஆண்டு காலம் மக்களுக்கு எதுவும் செய்யாமல் கடைசிக் காலத்தில் அறிவிப்பு செய்தது மக்களை ஏமாற்றியுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில், எடப்பாடி பழனிசாமி என்று ஒருவர் இருந்தாரா என்றே தெரியாது. ஆனால், இந்தத் தேர்தலில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஏனென்றால் இந்த தேர்தலின் முடிவுக்குப் பிறகு அவர், அறிவிப்புகளை நிறைவேற்றும் இடத்தில் இருக்கப் போவதில்லை.

தமிழனின் இனம், குணம் இவற்றின் குறியீடே மொழி தான். தமிழ் மொழி, தமிழினத்திற்கு முழு விரோதி மத்திய பா.ஜ.க தான். மத்திய அமைச்சரவையில் கேள்வி பதில் எல்லாம் இந்தியில்தான் பேசுகிறார்கள். இந்தி தெரிந்தால் பேச முடியும் என்ற நிலையை உருவாக்குகிறார்கள். தமிழ் மீது இந்தி அமரபோகிறதா? இதற்கு தேர்தல் முடிவுகளின் மூலம் தக்க பாடம் புகட்டுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: விவசாயத் துறையில் தமிழகத்தை தலைநிமிரவைத்த தி.மு.கழக அரசுகள் : மகுடம் சூடிய தி.மு.க -3