Tamilnadu
“தமிழர்களின் சுயமரியாதையை டெல்லியில் அடகு வைத்து விட்டது எடப்பாடி அரசு”: கனிமொழி MP குற்றச்சாட்டு!
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்செந்தூர் உட்பட்ட குரும்பூரில் நடைபெற்றது.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த செயல்வீரர் கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற தி.மு.க குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்துகொண்டு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி கனிமொழி எம்.பி பேசினார்.
அப்போது, “அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிடையாது. அடிப்படை வசதிகள் கிடையாது வேலைவாய்ப்பு கிடையாது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது என்ற பல்வேறு விதங்களில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கெல்லாம் ஒரு விடியல் ஏற்பட வேண்டும் என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி ஏற்பட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டின் சுயமரியாதையையும், தமிழர்களின் சுயமரியாதையையும், தமிழகத்தின் உரிமைகள் எல்லாவற்றையும் இந்த அ.தி.மு.க ஆட்சி டெல்லியில் கொண்டு அடகு வைத்து விட்டது. இன்று விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை மத்திய அரசு பறித்து வருகிறது. ஆனால் இந்த அதிமுக அரசு எதையும் கண்டுகொள்ளாமல் முதுகெலும்பு இல்லாத ஆட்சி தான் இந்த அ.தி.மு.க ஆட்சி.
தமிழகத்திற்கு துரோகம் செய்யும் ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சி இருந்து வருகிறது. இந்த ஆட்சியை மாற்ற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு செய்யப்படும். அந்த வகையில் தான் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பேருந்துகளில் இலவச பயணம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கேஸ் மானியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது அனைத்தும் தி.மு.க ஆட்சி ஏற்பட்டு உடன் செய்து கொடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!