முரசொலி தலையங்கம்

“நீங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் நம்பத்தயாராக இல்லை; சந்தி சிரிக்கும் பழனிசாமியின் புளுகுகள்” - முரசொலி

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை அச்சு பிசகாமல் காப்பி அடித்த அ.தி.மு.கவின் அறிக்கையை விமர்சித்து தலையங்கம் தீட்டியுள்ளது முரசொலி நாளேடு.

“நீங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் நம்பத்தயாராக இல்லை; சந்தி சிரிக்கும் பழனிசாமியின் புளுகுகள்” - முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. தலைவர் எதைச் சொன்னாலும், அதனை மறுநாளே நிறைவேற்றிக் காட்டுபவராக பழனிசாமி இதுவரை இருந்தார். இப்போது தி.மு.க. தலைவர்தனது எண்ணங்கள் என்று சொன்னதையும் தனது எண்ணங்களாகச் சொல்லிக்கொள்கிறார் பழனிசாமி!கொரோனா பரவுகிறது என்று தெரிந்து முன்கூட்டியே சட்டசபையைஒத்திவைக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். முதலில் பழனிசாமி மறுத்தார்.அதன் பிறகு ஒத்தி வைத்தார். அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர்.

தி.மு.க. தலைவர் எதைச் சொன்னாலும், அதனை மறுநாளே நிறைவேற்றிக் காட்டுபவராக பழனிசாமி இதுவரை இருந்தார். இப்போது தி.மு.க. தலைவர் தனது எண்ணங்கள் என்று சொன்னதையும் தனது எண்ணங்களாகச் சொல்லிக்கொள்கிறார் பழனிசாமி!

கொரோனா பரவுகிறது என்று தெரிந்து முன்கூட்டியே சட்டசபையை ஒத்திவைக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். முதலில் பழனிசாமி மறுத்தார். அதன் பிறகு ஒத்தி வைத்தார்.

அனைவருக்கும் டெஸ்ட் எடுக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். முதலில் பழனிசாமி மறுத்தார். அதன் பிறகு அதிக டெஸ்ட் எடுக்கத் தொடங்கினார். அதிகமான அளவுக்கு டெஸ்ட் எடுத்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று விளம்பரம் கொடுக்கிறார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்கச் சொன்னார் தி.மு.க. தலைவர். பணம் இல்லை என்று மறுத்தார் பழனிசாமி. அதன்பிறகு 2500 ரூபாய் கொடுத்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யச் சொன்னார் தி.மு.க. தலைவர். அதன்பிறகுதான் ரத்து செய்தார்.

இ பாஸ் ரத்து செய்யச் சொன்னார் தி.மு.க. தலைவர். அதன் பிறகுதான் ரத்து செய்தார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தி.மு.க. போராடிய பிறகு தான், ஆளுநருக்கு பழனிசாமி அழுத்தம் கொடுத்தார்.

விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. தலைவர் சொன்னார். கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்துள்ளார் பழனிசாமி.

மக்களின் குறைகளை 100 நாளில் தீர்ப்பேன் என்று அறிவித்தார் தி.மு.க. தலைவர். உடனே செல்போனில் பேசினால் தீர்ப்பேன் என்று சொல்கிறார்.

ஜெயலலிதாவால் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட 1100 என்ற திட்டத்தை தூசி தட்டி எடுத்தார் பழனிசாமி.

இப்படி அனைத்துமே தி.மு.க. தலைவரால் சொல்லப்பட்ட பிறகு பழனிசாமியால் செய்யப்பட்டவை. இப்போது அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார் பழனிசாமி. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடிப்பது என்பதுதான் அது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம்.

மகப்பேறு கால விடுப்பு ஓராண்டு.

மகளிருக்கு பேருந்து பயணச் சலுகை திட்டம். (தி.மு.க. அறிவித்தது கட்டணமில்லா பயணம்!)

மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீட்டு முறை.

முதியோர் உதவித் தொகை உயர்வு.

100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்வு.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்.

மகளிருக்கு 1500 ரூபாய் உதவித்தொகை.

கல்விக்கடன் தள்ளுபடி

10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்.

வெளிநாடு வாழ் தமிழர்க்கு தனித்துறை

கரிசல் மண் எடுக்க தடையில்லா அனுமதி

ஆட்டோ வாங்க மானியம்.

கிராமப்புற பூசாரிகளுக்கு ஓய்வூதியம்

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை.

அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பேட்டை

அனைத்து கோவில்களும் புனரமைப்பு

இப்படி அ.தி.மு.க. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அ.தி.மு.க. அறிவிப்பதற்கு முன்னதாக தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில்இருக்கிறது.

அதனையே அப்படியே காப்பி அடித்து எழுதி, டைப் செய்து, ஸ்பைரல் பைண்டிங் போட்டு ( புத்தகமாகக் கூட தயாரிக்க பாவம் நேரமில்லை!) எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். இது பற்றிக் கேட்டால், ‘எங்கள் ஆட்கள் தி.மு.க.வுக்கு தகவல் கொடுத்துவிட்டார்கள்' என்கிறார் பழனிசாமி. ‘நாங்கள் செய்யப் போவதை தெரிந்துகொண்டு ஸ்டாலின் அறிவித்துவிட்டார்' என்கிறார் பழனிசாமி.

“நீங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் நம்பத்தயாராக இல்லை; சந்தி சிரிக்கும் பழனிசாமியின் புளுகுகள்” - முரசொலி

இப்படி எல்லாம் பேட்டி தருவதற்கு ஒரு முதலமைச்சருக்கு வெட்கமாக இல்லையா? அரசாங்கத்தின் ரகசியங்கள் கசியும் அளவுக்குத்தான் அ.தி.மு.க.அரசாங்கம் இருக்கிறதா? இதை விட இந்த அரசாங்கத்துக்கு அவமானம் என்ன இருக்க முடியும்? ஒரு எதிர்க்கட்சி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆனால் ஆளும் கட்சியும் அதையே எப்படி வழிமொழிய முடியும்? ‘நாங்கள் இதையெல்லாம் செய்துவிட்டோம்' என்று சொல்ல வேண்டாமா? அப்படிச் சொல்வதற்கு ஏதாவது பழனிசாமியிடம் இருக்கிறதா? பத்தாண்டு காலம் அ.தி.மு.க. என்ன செய்தது? எதுவும் செய்யவில்லை. 2011ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையையும் நிறைவேற்றவில்லை.

சட்டமன்றத்தில் சொல்லப்பட்டவையும் காற்றோடு போனது. விதி எண் 110 இன் கீழ் செய்யப்பட்ட அறிவிப்புகளும் அத்தோடு போனது. இப்படி மொத்தமாக அனைத்து வாக்குறுதிகளையும் காற்றில் பறக்க விட்ட அரசுதான் அ.தி.மு.க. அரசு. அதனால் பழனிசாமி எதைச் சொன்னாலும் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை! கெட்டிக்காரன் புளுகு சந்தி சிரிக்க ஆரம்பித்து விட்டது என்பது தேர்தல் களத்தில் தெரிகிறது!

banner

Related Stories

Related Stories