Tamilnadu
GST, பணமதிப்பிழப்பால் நாதியற்று போன சிறு,குறு தொழில்கள்: வேலை வாய்ப்பை தரும் 1லட்சம் தொழிற்சாலைகள் மூடல்!
சிறு, குறு, நடுத்தர தொழில்கள்தான் நாட்டிலேயே எண்ணற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வரும் மிகப்பெரும் கட்டமைப்பாகும். இந்தக் கட்டமைப்பு என்பது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுத்துவதை தடுப்பதுடன் பண புழக்கத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் துணையாக இருந்து வருகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சிறு, குறு தொழில்களுக்கு அரசு உதவி செய்வதற்கு தொடர்ந்து மறுத்து வருகிறது.
குறுந்தொழில்களின் பிரச்சினைகளை கேட்க கூட தயாராக இல்லை. இந்தத் துறையைப் பொறுத்தவரையிலும் ஜாப்பாடர்கள் உதிரி பாகங்கள் தயாரிப்பதில் நாடு முழுமையிலும் 6 கோடி பேர் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் உற்பத்தித் துறையில் 90 சதவீதம் உள்ள இந்த குறு சிறு தொழில்கள் பாதுகாப்பதற்கான நடவடிக்கை அரசு எடுக்கவில்லை. கடந்த 2016ல் திடீரென கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்தோம். அதில் ஏற்பட்ட இழப்புக்கு எந்த உதவியும் செய்திட அரசு முன்வரவில்லை.
இதை தொடர்ந்து, கடந்த 2017ல் ஜி.எஸ்.டி. அமல்படுத்திய பிறகு, அதனால் ஏற்பட்ட பாதிப்பு இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு என்னதான் பிரச்சினை என்று கேட்பதற்கு நாதியற்ற நிலையில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. கடந்தாண்டு உலகமெங்கும் கொரோனா தொற்று பரவிய சூழ்நிலையில், மக்கள் அனைவரும் முடக்கப்பட்டார்கள். உலக நாடுகள் எல்லாம் தன் மக்களையும், அங்கு சிறு, குறு தொழில்களை பாதுகாத்திட எண்ணற்ற திட்டங்களும், மானியங்களும் வழங்கி உதவிகளும் செய்தது.
2021-2022 மத்திய அரசு பட்ஜெட்டிலாவது ஏதாவது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. கொரோனா நெருக்கடியில் இருந்து மீண்டு வரும்பாது மத்திய அரசு பட்ஜெட்டில் தனி கடன் திட்டத்தை சிறு குறு தொழிலில் ஈடுபடுவோருக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அதுவும் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால், இந்த அரசு அதை காது கொடுத்து கேட்கவில்லை. இந்த கொரோனா கால நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு கடன் வாங்கி வட்டி கட்ட முடியாமல் இருப்பவர்களுக்கு 1 வருடம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். மேலும், வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டோம்.
ஆனால், அவர்கள் எதையும் செய்யவில்லை. குறுந்தொழிலுக்கு நிபந்தனையற்ற கடனும் கிடையாது. ஆனால் மிகப்பெரும் அறிவிப்பு செய்தனர். தொழில் முனைவோர்களுக்கு மூன்று லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு மட்டும் வந்தது. ஆனால், யாருக்கு கடன் கொடுக்கப்பட்டது என்ற கேள்வி இப்போது வரை உள்ளது. வங்கியில் கடன் பெற்ற தொழில் முனைவோர்களுக்கு ஏற்கனவே வாங்கிய கடனில் 20 சதவீதம் புதிய கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி, அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் இந்த காலகட்டத்தில் ஏற்கனவே கடன் வாங்கி முழுமையாக செலுத்தியவர்களுக்கோ கடனை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
குறுந்தொழில்களுக்கும் இந்தக் கடன் திட்டத்தில் கடன் இல்லை என்று கை விரித்துவிட்டனர். மத்திய அரசு போன்று மாநில அரசும் எங்களது கோரிக்கையை புறக்கணித்துவிட்டது. 6 மாதம் கொரோனாவால் தமிழகம் முழுவதும் கம்பெனிகள் மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் மின்சாரம் கட்டணம் ரத்து செய்யவேண்டும் என்று கேட்டோம். நாங்கள் தமிழக மின்சாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால், தமிழக அரசு இதை கண்டுகொள்ளவில்லை. மாநில அரசிடம் கடைகளுக்கு வாடகையை கூட தர முடியாது. தொழிலாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும்.
தமிழக அரசே தனி கடன் திட்டத்தை அறிவித்து குறைந்த வட்டியில் தாய்கோ வங்கியின் மூலம் தர வேண்டும் என்று கேட்டோம். ஆனால், தமிழக அரசு இதை கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் சிறு குறு தொழில்தான் அதிக வேலைவாய்ப்பை கொடுக்கிறது. தமிழகத்தில் சிறு, குறு தொழில்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக சிறு, குறு, நடுத்த தொழில் ஈடுபட்டு வருவோர் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தோம், காத்திருந்தோம். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் தொழில்களுக்கு தேவைப்படும் மூலப் பொருள்களின் விலை 30 சதவீதத்திலிருந்து 150 சதவீதமாக உயர்த்திவிட்டனர்.
மூலப்பொருளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அதற்காக கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் கோரி இருந்தோம். கமிட்டியும் இல்லை, விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இல்லை. இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் சிறு, குறு தொழில்களின் நிலைகள் கேள்விக்குறியாக உள்ளது. இதற்காக விடை தேடி அலையும் தொழில் முனைவோருக்கு உதவிட வழி காட்டிட முன்வருவார்களா எனக் காத்திருக்கிறோம். தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர 12 லட்சம் தொழிற்சாலைகள் இருந்தது. இதில், கொரோனா ஊரடங்கினால், 1 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிற் சாலைகள் மூடப்பட்டன.
பல்லாயிரக்கணக்கானோர் வேலையை விட்டு சென்று விட்டனர். சிறு, குறுந்தொழில் ஈடுபட்டோர் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர். இந்த நெருக்கடி காலகட்டத்தில் மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை சேகரிக்க கூட அரசு தயாராக இல்லை. இந்த குறுந்தொழிலை பொறுத்தவரை உள்ளூர்க்காரர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. குறுந்தொழிலில் வங்கிகள் கடன் தர மறுப்பதால் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. மீட்டர் வட்டி, கந்துவட்டிக்காரர்களிடம் வேறு வழியின்றி கடன் வாங்கியுள்ளனர்.
இந்த கொரோனா காலத்தில் கடன் வாங்கியவர்களிடம் கந்து வட்டிக்காரர்கள் லட்சக்கணக்கில் வட்டியாக கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகின்றனர். குறுந்தொழில் ஈடுபடுவோரின் இயந்திரங்களை தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியொரு சூழ்நிலையில் இதை தடுக்க கூட யாரும் முன்வரவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது. வரக்கூடிய அரசாங்கம் சிறு குறு தொழில்கள் புத்துயிர் பெற தனிக்கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். சிறு, குறு தொழில் நல வாரியம் அமைக்கவேண்டும்.
கோவை போன்ற தொழில் நகரங்களில் தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும். தமிழக அரசு சிறு குறு தொழில்துறைக்கு தனி அமைச்சர் நியமிக்க வேண்டும். இந்த தொழிலை பாதுகாக்க முன்னின்று நடவடிக்கை எடுத்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். 6 மாதம் கொரோனாவால் தமிழகம் முழுவதும் கம்பெனிகள் மூடப்பட்டன. இந்த காலகட்டத்தில் மின்சாரம் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டோம். நாங்கள் தமிழக மின்சாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால், தமிழக அரசு இதை கண்டுகொள்ளவில்லை
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?