Tamilnadu
“கொரோனா தடுப்பூசியால் ரத்தக் குழாயில் பாதிப்பு” : தடுப்பூசிக்கு தடை விதித்த நெதர்லாந்து அரசு !
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா என உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி மருந்தைக் கண்டு பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டின.
இதன்விளைவாக, கொரோனா தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்டு, அமெரிக்கா, ரஷ்யா, சவூதி , பிரிட்டன், இந்தோனேசியா, நெதர்லாந்து, இந்தியா என பல்வேறு நாடுகளிலும் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நெதர்லாந்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அஸ்ட்ரா ஜெனிக்காவின் தடுப்பூசி மருந்துகள் மக்களுக்குச் செலுத்தப்பட்டு வந்தது. பொதுவாகத் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால், தலைவலி, காய்ச்சல் போன்று லேசான பக்க விளைவுகள் தான் ஏற்படும்.
ஆனால், நெதர்லாந்தில் ஆஸ்ட்ரோ ஜெனிக்கா நிறுவனத்தின் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட செவிலியருக்கு, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட, பலருக்கும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த நெதர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மார்ச் 28ம் தேதி வரை தடை வித்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு பக்கவிளைவுகள் ஏதாவது ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனத்தின் தடுப்பூசி மருத்திற்கு டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!