Tamilnadu
கூட்டணி குழப்பத்திற்கிடையே மக்களை கைவிட்ட பழனிசாமி அரசு... தீவிரமடையும் கொரோனா - இன்று 685 பேர் பாதிப்பு!
கொரோனா பரவலை கட்டப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடுமுழுவதும் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதுதான் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்திலும் பரவல் தீவிரமடைந்துள்ளது.
கொரோனா தீவிரமடைந்துள்ள ஐந்து மாநிலங்களில் இருந்தும், தமிழகத்திற்கு தாராளமாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. கூட்டணிக் குழப்பங்களால் மக்களை மறந்த அ.தி.மு.க அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை.
இதனால் நேற்று புதிதாக 671 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று புதிதாக 685 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 685 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,57,602 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 65,764 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,77,68,971 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இன்று சென்னையில் 292 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,38,007 ஆக அதிகரித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 52 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 51 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 36 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 543 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,40,723 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 4,344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 2 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,488 ஆக அதிகரித்துள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!