Tamilnadu
“10ம் வகுப்பு மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை”: அ.தி.மு.க ஆட்சியின் அடுத்த ‘பொள்ளாச்சி சம்பவம்’!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள, தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தாராபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
இந்நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும், பெண் ஒருவரின் தம்பியான, தளவாய்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பாட்சா என்பவன் சிறுமியிடம் அடிக்கடி ஆசை வார்த்தைகள் கூறி பேசி வந்துள்ளான். இந்நிலையில், கடந்த மாதம் மறைவான பகுதிக்கு அழைத்துச்சென்று சிறுமியை சீரழித்துள்ளான்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு, பாட்சா அவனது நண்பனான தளவாய்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, அப்பாஸ் என்பவனோடு சேர்ந்துகொண்டு, மாணவிக்கு போன் செய்து மீண்டும் அதே இடத்திற்கு வரும்படி மிரட்டி அழைத்து வந்து நண்பர்களான இருவரும் சேர்ந்து, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, உடல் வேதனையை தாங்க முடியாமல் வீட்டிலிருந்தவர்களிடம் கதறி அழுதுள்ளார். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்குச் சென்ற தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா மணி தலைமையிலான, போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு, பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தாராபுரம் அனைத்து மகளிர் போலிஸார், குற்றவாளிகள் இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?