Tamilnadu
உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் பாலியல் அத்துமீறல் : மென்பொருள் நிறுவன ஊழியர் கைது!
சென்னை தரமணி, அசென்டாஸ் சாலையில் உலக வங்கி கிளை உள்ளது. இதில் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக சரத் சந்தர் (41) பணியாற்றி வருகிறார். இவர் உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக சிலர் நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றி பணம் வசூலிப்பதாக பெண் ஒருவர் இ-மெயில் மூலம் தன்னிடம் தெரிவித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தரமணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சென்னை ஜாபர்கான்பேட்டை, எஸ்.எம் கார்டன் பகுதியைச் சேர்ந்த அந்தோணி (39) என்பவர் ஏமாற்றி வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் நேற்று அந்தோணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்தோணி உலக வங்கி கிளைக்கு அருகில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் இவர் பலரிடம் தான் உலக வங்கியில் வேலை செய்வதாகக் பொய் கூறி அதே வங்கியில் வேலை வாங்கித் தருவதாகப் பலரை ஏமாற்றியிருக்கிறார்.
சமீபத்தில் தரமணியை சேர்ந்த ஒரு பெண்ணிடமும் வேலை வழங்குவதாக கூறி நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றியதாகவும் தெரியவித்தார். மேலும் இவர் மீது ஏற்கனவே பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து எத்தனை பேரிடம் உலக வாங்கியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி உள்ளார் என்பது குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!