Tamilnadu
எஸ்.பி.வேலுமணி உத்தரவின் பேரில் கோழி, ஆடுகளை விநியோகிக்கும் அ.தி.மு.கவினர் : நீலகிரியில் அட்டூழியம்!
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே அ.தி.மு.கவின் நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் வேலுமணி வீடுவீடாக 500 ரூபாய் பணம், வேட்டி சேலை, ஒரு தட்டு போன்றவற்றை வழங்கினார். இதைத்தொடர்ந்து 4 வழக்குகள் அ.தி.மு.கவினர் மீது பதிவு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று குன்னூரை சுற்றி உள்ள இருளர், பழங்குடியினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராம பகுதிகளில் அமைச்சர் வேலுமணி உத்தரவின்பேரில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு வீடு வீடாகச் சென்று ஒரு வீட்டிற்கு 10 நாட்டு கோழிக்குஞ்சுகள், ஒரு இலவச ஆடு வழங்குவதற்கான டோக்கன்களை வழங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அப்பகுதியில் சிலர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வந்த 4,500 கோழிக் குஞ்சுகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து கோழிக்குஞ்சுகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றனர். தோல்வி பயம் காரணமாக அமைச்சர் வேலுமணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!