Tamilnadu
நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு.. கொரோனாவை தொடர்ந்து புதிதாக முளைத்துள்ள பர்வோ வைரஸ் - அச்சத்தில் மக்கள்!
சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா அதன் கோர முகத்தைக் காட்டி வருகிறது.
இதற்கு மத்தியில் பறவைக் காய்ச்சல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவத்தொடங்கி காகங்கள் இறந்துகிடந்தன. இந்நிலையில் இந்த பாதிப்புகளில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில் தற்போது பர்வோ என்ற வைரஸ் நாய்களுக்கு பரவத்தொடங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இதுவரை எட்டு நாய்கள் பர்வோ வைரஸுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த எட்டு நாய்களின் பிரேதங்களை பரிசோதனை செய்ததில், அவற்றின் குடல் சிதைந்துவிட்டதாகவும், இறப்பதற்கு முன் ரத்த வாந்தி எடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
பர்வோ வைரஸ் உயிர்க்கொல்லி வைரஸ் மட்டுமல்லாமல் மிக வேகமாகப் பரவக்கூடியது. இந்த வைரஸ் நாய்களின் இரைப்பை மற்றும் குடலை தாக்கி பிரச்னைகளை உண்டாக்குகிறது எனக் கூறப்படுகிறது. உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட நாய் இறந்துவிடும் என்று கூறப்படுகிறது.
கான்பூரில் உள்ள பிதர்கோன், கியோந்தரா ஆகிய பகுதிகளில் மேற்கூறிய எட்டு நாய்களும் இறந்து கிடந்துள்ளன. இதே பகுதியில் சில வாரங்களுக்கு முன் மர்மமான முறையில் காகங்கள் இறந்துகிடந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!