Tamilnadu
முப்போகம் விளையும் டெல்டா மாவட்டங்களை பழிவாங்குவதா?: தஞ்சையில் கருப்பு கொடி ஏற்றி முதல்வருக்கு எதிர்ப்பு!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொன்னாப்பூர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழக காவேரி விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் துரை பாஸ்கரன் தலைமையில், இன்று மேட்டூர் அணையின் உபரி நீர் சாரபங்கம் திட்டத்தில், அணயை திறந்து வைக்க வரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு காவேரி விவசாய சங்கத்தின் சார்பாக கிராமங்கள்தோறும் கருப்பு கொடி ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் துரை பாஸ்கரன் கூறுகையில், “தமிழக முதலமைச்சர் கொங்கு மண்டலங்களை பாதுகாப்பதாக நினைத்து, முப்போகம் விளையும் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் வகையில் மேட்டூர் அணையில் உள்ள உபரி நீரை சார பங்கம் திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடிக்கல் நாட்டி சென்னையில் திறந்து வைத்தார் .
இந்நிலையில், உபரி நீரை கொங்கு மண்டலங்களுக்கு எடுத்துச் சென்றால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும். இந்தத் திட்டத்தினால் ஒரு போகம் கூட சரிவர விவசாயம் செய்ய முடியாது எனவும், இதற்கு அடிக்கல் நாட்டி திறந்துவைத்த முதலமைச்சருக்கும் டெல்டா மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களுக்கும் தமிழக விவசாய சங்கத்தின் சார்பாக கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
மேலும் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், முதலமைச்சர் இன்று திறந்து வைத்தது டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாய சங்க பிரதிநிதிகள், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கு எதிராக கோஷமிட்டு கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!