Tamilnadu

சுண்டுவிரல் காயத்திற்கு மருத்துவமனை சென்றவரின் பரிதாப நிலை : மருத்துவர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட சோகம்!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிஸ்வஜீத் மண்டல். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக மதுரை தெற்கு வாசல் பகுதியில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இவர் தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிஸ்வஜீத் மண்டல் கடந்த மாதம் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். அப்போது அவரது சுட்டு விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், தெற்கு வாசலில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விரல் எலும்பு முறிந்துள்ளது என கூறி கட்டுப்பாட்டு சில மருந்துகளை எழுதிக்கொடுத்துள்ளனர்.

பின்னர், ஒரு வாரம் கழித்து பிஸ்வஜீத் மண்டல் கட்டை அவிழ்த்துள்ளார். பிறகு அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தெற்கு வாசலில் உள்ள தோல் சிகிச்சை மருத்துவரை அணுகினார். அங்கு அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் சில மருந்துகளை எழுதிக் கொடுத்துள்ளனர். இதை சாப்பிட்டு வந்த பிஸ்வஜீத் மண்டலுக்கு திடீரென பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், மீண்டும் அவர் நெல்பேட்டையில் உள்ள அருண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். பிறகு, அங்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், என்னென்ன மருந்து சாப்பிட்டார் என்பதை கேட்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து பிஸ்வஜீத் மண்டல் கூறுகையில், "எலும்பு முறிவு மருத்துவரின் அலட்சியமே இதற்குக் காரணம். 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் ஏன் இப்படி ஆனது என்றே தெரியவில்லை" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Also Read: யார் இந்த ராஜேஷ் தாஸ்? எடப்பாடி பழனிசாமியுடன் ஏன் இத்தனை நெருக்கம்? - வெளிவரும் உண்மைகள்!