Tamilnadu
#GoBackModi என பதிவிட்ட நடிகை ஓவியா மீது சென்னையில் பா.ஜ.கவினர் புகார்!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்தார். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சென்னை-வண்ணாரப்பேட்டை முதல், விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, தூத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை துவங்கி காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
முன்னதாக பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. நீட் தேர்வு, இந்தி திணிப்பு என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. அந்த வகையில் தமிழகம் வந்த மோடிக்கு எதிராக நடிகை ஓவியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் #Gobackmodi என பதிவிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களிடையேவும், இணைவாசிகளிடையேவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi என கருத்து பதிவிட்ட நடிகை ஓவியா மீது பா.ஜ.க சார்பில் வழக்கறிஞர் அலெக்ஸ் சுதகார் என்பவர் சென்னை சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், இறையாண்மையை தடுக்கும் வகையிலும் செயல்பட்டதாக கூறியுள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!