Tamilnadu
“காஞ்சிபுரம் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி” : கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட சோகம்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா கேட்டரிங் இண்டஸ்ட்ரியல் சர்வீஸ் என்ற தனியார் கேட்டரிங் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்க்கின் விஷவாயு தாக்கியதில் காட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முருகன், பாக்கியராஜ் மற்றும் அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த சோமங்கலம் போலிஸார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பலியான மூவரின் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 2019ல் கூட ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் வேலை செய்யும் ஊழியர்களையே எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி நிர்வாகத்தினர் ஈடுபட வைக்கின்றதால் தான் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தூய்மை பணியாளா்கள் பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று நீதிமன்றமும், சமூக ஆா்வலா்களும் எச்சரித்து வந்தாலும். பெரும்பாலான பகுதிகளில் துப்புரவு பணியாளா்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரிய நிறுவனங்கள் இதைக்கண்டுக்கொள்வது இல்லை.
அப்படி எந்தவித பாதுகாப்பும் இன்றி, பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்க அரசு முயற்சி எடுக்கவேண்டும். மேலும் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.
Also Read
-
பா.ஜ.க.வும் தேர்தல் ஆணையமும் கூட்டாகச் சேர்ந்து செய்யும் சதி - அம்பலப்படுத்திய முரசொலி !
-
“பீகார் மக்களை தமிழ்நாட்டின் வாக்காளராக மாற்றத் தான் இந்த SIR ஆ?” : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
உங்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும் : தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் உறுதி!
-
”ராஜேந்திர பாலாஜி பேச்சில் காமெடி இருக்கும்! உண்மை இருக்காது!” : அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!
-
”மாற்றுத்திறனாளிகளை அவமதித்து பேசுவது தண்டனைக்குரிய குற்றம்” : அ.தி.மு.க நிர்வாகிக்கு தீபக் கண்டனம்!