Tamilnadu
பொதுமக்களே உஷார்..! வேலை வாங்கி தருவதாக கூறி பிரதமர் அலுவலக பெயரில் பல கோடி ரூபாய் பணம் பறித்து மோசடி!
பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலகப் பெயர்களை பயன்படுத்தி மத்திய அரசு வேலை மற்றும் எம்.பி சீட் வாங்கித்தருவதாக கூறி பல கோடி மோசடி செய்துள்ளதாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆளுநர் மாளிகைக்கு ஏகப்பட்ட புகார்கள் சென்றுள்ளன.
இதனையடுத்து அந்த புகார்கள் அனைத்தும் காவல்துறை டி.ஜி.பிக்கு அனுப்பப்பட்டு அவரது உத்தரவின்படி சி.பி.சி.ஐ.டி போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மைசூரை சேர்ந்த மகாதேவ், அவரது மகன் அங்கித், ஓசூரை சேர்ந்த ஓம் ஆகிய மூன்று பேரும் பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி மத்திய அரசு வேலை மற்றும் எம்.பி சீட் வாங்கித்தருவதாக கூறி பல கோடி மோசடி செய்தது தெரிவந்தது.
இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் நடத்திய விசாரணையில், பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலகங்களில் இருந்து இ-மெயில் அனுப்புவது போல மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது. மோசடி நபர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் அங்கு முகாமிட்டு தேடி வந்தனர்.
கடந்த ஒருவார காலமாக பெங்களூர், மைசூர் போன்ற பகுதிகளில் முகாமிட்டு தேடி வந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலிஸார் மோசடி கும்பலை கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி போலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!