Tamilnadu
தமிழகத்தில் மேலும் 503 பேருக்கு கொரோனா உறுதி - இன்று 544 பேர் டிஸ்சார்ஜ் : கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 52,457 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,58,60,674 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் இன்று மட்டும் 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,36,818 ஆக அதிகரித்துள்ளது. அதேப்போல், கொரோனாவால் இன்று மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 12,339 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 151 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,834 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 544 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,19,850 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 4,629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !