Tamilnadu
மழைநீரை சேமிக்க முடியாததால் குடிநீர் தட்டுப்பாடு- கடலில் வீணாக கலப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும்: ஐகோர்ட்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதையும், இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் மீண்டும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு காரணம் நிலத்தடி நீர் முறையாகச் சேமிக்கப்படவில்லை என்றும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் நேரடியாக கடலுக்குச் சென்று கலப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் முறையாக பயன்படுத்தாமல் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுகொண்டுள்ள மனுதாரர், நிலத்தடிநீர் மேலாண்மை இல்லாதததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும், அதேபோல மழைநீரோடு கழிவுநீர் கலந்து செல்வதை தடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், நான்கு வாரத்திற்குள் நிபுணர் குழுவை அமைத்து உரிய பரிந்துரைகளை வழங்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!