Tamilnadu
“விறுவிறுப்பாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு” : சீறிப்பாயும் காளைகளை வீரத்தோடு அடக்கும் காளையர்கள்!
கொரோனோ என்ற வார்த்தையைக் கேட்டு பீதியில் இருக்கும் நமக்கு, தொட்டுப்பாரு... மச்சக்காளை மிரட்டுது ஆஹா... சூப்பர் மாடு, ஒரு தங்கக்காசு.. ஆஹா சூப்பர் மாடு.. ஒரு தங்கக்காசு.. ஒரு தங்கக்காசு.. என தொடர்ந்து உற்சாக வார்த்தைகளால் புத்துணர்ச்சியுடன் தொடங்கி உள்ளது.
அந்தவகையில், விறுவிறுப்பாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காளைகள், காளைகளை அடக்கும் கட்டிளம் காளைகள் களமாடும் வேகத்தில் அடங்கிவிடும் இளையோர் என களை கட்டுகிறது.
மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு களத்தில் முன்பாக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. வாடிவாசல் அருகில் வி.ஐ.பி மற்றும் பிற பார்வைகள் அதற்கான கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
காளைகள் ஓடும் பகுதியான அவனியாபுரம் மெயின் சாலையில் இருந்து இருபுறமும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் வரை மூங்கில் தடுப்பில் இரும்பு தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. போட்டியின்போது வீரர்கள் காயம் ஏற்படாமல் தரையில் தேங்காய் நார் பரப்பப்பட்டுள்ளது.
கொரோனா சூழலுக்கு பின் மக்களை மகிழ்விக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் 431 வீரர்கள் 788 காளைகளை அடக்க களம் இறங்குகிறார்கள் வீரர்கள் காலை உரிமையாளர் உடன் வருவோருக்கு கொரோனா பரிசோதனைக்குப் பிறகு உடல் தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு வரும் வீரர்களுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். காயம் ஏற்படும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழுவும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களும் தயாராக இருக்கின்றனர். அரசு அலுவலர்கள் அதிகாரிகள் கண்காணிப்பில் 1500 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!