Tamilnadu
“பொங்கல் பரிசுத்தொகையை நாங்கள்தான் கொடுப்போம்” : ரேஷன் கடை ஊழியர்களிடம் அத்துமீறும் ஆளுங்கட்சியினர்!
திருவாரூரில் உள்ள தனியார் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், “தமிழக அரசு தற்போது டாஸ்மாக் மது பார்களை திறக்க உத்தரவிட்ட நிலையில் பார் உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் நிர்ப்பந்தப்படுத்தி வாங்கும் நிலை உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பார் கடையில் கடையின் உரிமையாளர் கூறியபடி நடக்கவேண்டும் இல்லை என்றால் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விடுவோம் துன்புறுத்தி வருகின்றனர்.
இதேபோல திருவண்ணாமலையில் ரேஷன் கடையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியரிடம் தகராறு செய்து பொங்கல் பரிசுத் தொகையை நாங்கள் தான் கொடுப்போம் என்று ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது மாதிரி மாநிலம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் டாஸ்மாக் அதிகாரிகளும் பணியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம், தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் வரும் ஜனவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
குழந்தைகளை வைத்து தவெக பிரச்சாரம் : அரசியல் உள்நோக்கம் கொண்டது - சென்னை ஐகோர்ட் அதிருப்தி கருத்து!
-
போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? : உதயநிதி கேள்வி!
-
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்.. : ஆதவ் அர்ஜூனாவுக்கு தி.மு.க பதிலடி!
-
“ஆம்னி பஸ்ஸில் 8 மடங்கு கொள்ளை ; மக்களின் காதுகளில் நாராசமாகதான் ஒலிக்கின்றன” : கே.என்.நேரு அறிக்கை!
-
தவெக நிர்வாகி வீட்டில் 135 KG போதைப்பொருள் பறிமுதல் - CM விஜயிக்கு தொடர்பு ?: எம்.எம்.அப்துல்லா கேள்வி!