Tamilnadu
சட்டப் படிப்புக்கு நுழைவுத் தேர்வா? சமூக நீதியின் ஆணிவேரை அறுத்தெறிய துடிக்கும் பாஜக - வைகோ கடும் கண்டனம்
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை புகுத்தியது போன்று சட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை புகுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “” இமருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ புகுத்தப்பட்டு, கிராமப்புற மாணவர்கள், பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மாணவர்களின் மருத்துவக் கனவை கானல் நீராக்கிய மத்திய பா.ஜ.க. அரசு, தற்போது சட்டக் கல்வியிலும் சமூக நீதியை ஒழிக்க முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.
“முதுகலை சட்டப் படிப்புக்கு இனிமேல் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும். முதுநிலை சட்டப் படிப்பு எல்.எல்.எம். என்பது இரண்டு ஆண்டு படிப்பாக்கி, ஓராண்டு படிப்பு ரத்து செய்யப்படும்” என்ற அறிவிப்பை இந்திய பார் கவுன்சில் அறிவித்து இருக்கிறது.
ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் சட்டம் பயின்று, முதுநிலை சட்ட மேற்படிப்பு பயில்வதை முற்றிலுமாக தடை செய்திடும் வகையில் உள்நோக்கத்தோடு இந்திய பார் கவுன்சில் அறிவிப்புகளைச் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சமூக நீதிக் கோட்பாட்டின் ஆணி வேரையே அறுத்தெறிய துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.
கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் மத்திய பா.ஜ.க.அரசு, முதுநிலை சட்டப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே இந்திய பார் கவுன்சில் தனது அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!