Tamilnadu
சென்னை மின்சார ரயிலில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : தமிழகத்தில் கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு?
நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பங்கள் அதிகரித்துள்ளதாக பெண்கள் நல அமைப்பினர் குற்றச்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச உள்ளிட்ட வடமாநிலங்களில், சிறுமிகள், இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் எடப்பாடி ஆட்சியிலும், பெண்கள் மீது நடக்கும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக நேற்று முன்தினம், நாகப்பட்டினம் அருகே இரவு நேரத்தில் நடந்து சென்ற பெண்ணை இளைஞர்கள் தாக்கி கோயிலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மற்றொரு தற்காலிக ரயில்வே ஊழியர்கள் இரண்டு பேர், சென்னை தாம்பரத்தில் 40 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தையடுத்த பரனுரை சேர்ந்த கூலி வேலை செய்யும் 40 வயதுடைய பெண் ராணி. இவருக்கும் குடிபோதை பழக்கம் உள்ளதாக கூறப்பட்டுகிறது. இந்நிலையில், நேற்று இரவு பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் பரனுர் செல்ல ஏறியுள்ளார்.
மது போதையில் இருந்ததால் ரயிலிலேயே தூங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த மின்சார ரயில் மீண்டும் கடற்கரைக்கு வந்து, அதன் பின்னர் தாம்பரம் வந்தடைந்த நிலையில், பராமரிப்பு செய்யும் பணிகாக தாம்பரம் மின்சார ரயில் பராமரிப்பு நிலையத்தில் நிறுத்திய நிலையில் ரயிலின் ஓட்டுனர் சென்றுவிட்டார்.
நள்ளிரவு ஒருமணியளவில் அங்கு வந்த தற்காலிக ஊழியர்கள் சுரேஷ்(30), அப்துல் அஜிஸ் (30) ஆகிய இருவரும் கட்டாயப்படுத்தி, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது; சொன்னால் கொன்றுவிடுதாக மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து அப்பெண் தாம்பரம் ரயில்வே போலிசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார் சுரேஷ், அப்துல் அஜிஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். தலைநகர் சென்னையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிகழ்வதாக சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!