Tamilnadu
நாகையில் அதிமுகவினருடன் கூட்டுசேர்ந்து குடைச்சல் கொடுத்த பாஜக பிரமுகர்; ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முறச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாமராமபுரத்தை சேர்ந்தவர் தமிழ்மணி. வேளாங்கண்ணியில் தாராபவன் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வருகிறார்.
தமிழ்மணி உணவக விடுதியை விரிவாக்கம் செய்வதற்கான கட்டட பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அருகில் உணவகம் நடத்தி வரும் பாஜக பிரமுகர் பாஸ்கர் அதிமுகவினர் உதவியுடன் கட்டுமான பணிகளை தொடர்ந்து தடுத்து வருகிறார்.
தமிழ்மணியின் உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளரை உணவு அருந்தவிடாமலும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவமானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் அதிமுகவினருக்கும் பாஜகவுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்மணி நேற்று பூச்சிமருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சி ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்ட கடை ஊழியர்கள் அவரை வேளாங்கண்ணி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்
ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வரும் தமிழ்மணியை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வேளாங்கண்ணியில் பாஜக பிரமுகரின் தொடர் தொந்தரவால் உணவக விடுதி உரிமையாளர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!