Tamilnadu
திருவள்ளூரில் மீண்டும் சாதி கொடுமை:பட்டியலின கவுன்சிலரை பணி செய்யவிடாமல் தடுக்கும் அ.தி.மு.க துணை தலைவர்!
திருவள்ளூர் மாவட்டதில் மீண்டும் ஒரு சாதி பாகுபாட்டு சர்ச்சை எழுந்துள்ளது.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் தலைவர் தங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் உள்பட மொத்தம் 15 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
ஒன்றியத்தில் மொத்தம் 12 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இதில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் அந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் மட்டுமே வாசிக்கப்பட்டன. ஆனால் மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் பங்கேற்காத காரணத்தால் தீர்மானங்கள் வாசிப்பு மட்டுமே செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் போனது. இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் தங்க தனம் செய்தியாளர்களிடம் கூறும்போது, தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் தன்னை ஒரு ஒன்றிய குழு தலைவராக செயல்பட விடாமல் சிலர் தடுக்கின்றனர். மேலும் அதிகாரிகளும் என்னை கண்டுகொள்வதில்லை.
கடந்த 2 மாதங்களாக தான் மக்கள் நலப்பணியில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் தன்னை எங்கள் கட்சியை சேர்ந்த ஒன்றிய அதிமுக செயலாளரும் துணைத் தலைவருமான இன்.என்.கண்டிகை ரவி தூண்டுதலின் பேரில் மற்ற கவுன்சிலர்கள் கலந்து கொள்ள விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். அதிமுக இரண்டு கோஷ்டிகளாக இருப்பதால் திருத்தணி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்து உள்ளன.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!