Tamilnadu
“தி.மு.க ஆட்சியில் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்” : துரைமுருகன் உறுதி!
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரசமங்கலம் வண்டறந்தாங்கல் மெட்டுகுளம் ஆகிய பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, “அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்” என்ற மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். பின்னர் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய துரைமுருகன், “இன்னும் நாலு மாத காலத்தில் தி.மு.க ஆட்சி வருவது உறுதி. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நின்றுபோன அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவது புதிய பயனாளிகளுக்கும் கேட்டவுடன் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், 100 நாள் வேலை திட்டம் 200 நாட்கள் வழங்கப்படும். ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டும்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பகுதி செயலாளர் சுனில் குமார் தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!