Tamilnadu
“அடிக்கடி சூட்கேசில் என் மூலம் பணம் கைமாறும்” : அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது அவரது உதவியாளர் பரபரப்பு புகார்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான் பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் உசிலம்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பா.நீதிபதியிடம் எலெக்ட்ரிசியன் ஆக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று எம்.எல்.ஏ விட்டிற்கு சென்ற எனது மகன் முருகன் மற்றும் அவரது மனைவி சுமதி இருவரும் வீடு திரும்பவில்லை என்றும் அங்கு அவர்களை அடித்து துன்புறுத்துவதாக முருகனின் தந்தை ராமர் என்பவர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
புகாரினை பெற்றுக்கொண்ட போலிசார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய சிறிது நேரத்திலேயே, காணமல் போனதாக கூறப்பட்ட முருகன் சுமதி என்ற இருவரும் காவல் நிலையம் வந்தனர்.
அப்போது முருகன் காவல்துறை அதிகாரியிடம் அளித்த புகாரில், “நான் எம்.எல்.ஏ.வின் உதவியாளராக உள்ளேன். எலெக்ட்ரிக் வேலைகளை செய்து வருகிறேன். அடிக்கடி எம்.எல்.ஏ-வுக்கு சூட்கேசில் பணம் என் மூலம் கைமாறும்.
அந்தவகையில், நேற்றைய தினம் 2 கோடி மதிப்பிலான ஒரு பெட்டியை மர்ம நபர் கொடுத்து எம்.எல்.ஏ பா.நீதிபதியிடம் கொடுக்க சொன்னார். நானும் அந்த பெட்டியை எம்.எல்.ஏ-விடம் கொடுத்த போது அதிலிருந்து சுமார் 44 லட்சம் குறைந்தாக கூறி, என்னையும், என் மனைவி சுமதியையும் எம்.எல்.ஏ வீட்டிற்கு வரவழைத்து அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் உடலில் காயங்கள் இருந்தால் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள முருகன் சுமதி தம்பதிகள் குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ பா.நீதிபதி மீது அவரது உதவியாளர் கண்ணீருடன் பேட்டியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!