தமிழ்நாடு

“காதலிக்க மறுத்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்த கூலித் தொழிலாளி” : தஞ்சையில் கொடூரம்!

காதலிக்க மறுத்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கழுத்தை கூலித் தொழிலாளி அறுத்த சம்பவம், தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“காதலிக்க மறுத்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்த கூலித் தொழிலாளி” : தஞ்சையில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்த ஆஷா வயது 20. இவர் தஞ்சையில் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அஜித் வயது 24 என்பவருக்கும் இடையே காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அஜித்தின் நடத்தை பிடிக்காததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்த நிலையில், தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்த அஜித், நேற்று மாணவி ஆசா கல்லூரிக்கு பேருந்தில் செல்லும் போது அதே பேருந்தில் ஏறி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மறுத்து வந்த மாணவியை, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அஜீத்தை பிடித்த தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

“காதலிக்க மறுத்ததால் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கழுத்தை அறுத்த கூலித் தொழிலாளி” : தஞ்சையில் கொடூரம்!

மாணவியை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கழுத்தில் காயம் அடைந்த மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மாணவனை கைது செய்து தஞ்சை நகர தெற்கு போலிஸார் விசாரித்து வருகின்றனர். காதலிக்க மறுத்ததால், கல்லூரி மாணவி கழுத்தை கூலித் தொழிலாளி அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories