Tamilnadu
“இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள 36 மீனவர்களை உடனடியாக மீட்கவேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும் எதிர்பாராததாகவும் உள்ளது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (16-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
“கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும் எதிர்பாராததாகவும் உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 36 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி கருவிகளையும் பாதுகாப்பாக தாயகம் மீட்டுவர நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!