Tamilnadu
சப்-ரிஜிஸ்தார் வீட்டிலிருந்து ரூ.13.11 லட்சம் பணம், 114 சவரன் நகைகள் பறிமுதல்- லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெருமளவு லஞ்சம் ஊழல் நடப்பதாக காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை தனிப்படையினா் நேற்று மாலை திடீரென கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து சோதணையிட்டனா். அலுவலக கதவுகளை மூடிவிட்டு சோதணை நடத்தினா். உள்ளே இருந்தவா்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. மாலை 4.30 மணிக்கு தொடங்கிய சோதணை இரவு 8.30 மணி வரை நடந்தது.
இந்த சோதனையின்போது சப் ரிஜிஸ்தாா் தனுமூா்த்தி அறையிலிருந்தும், அலுவலகத்தின் சில இடங்களிலும் மறைத்து வைத்திருந்த பணம் மற்றும் அங்கிருந்த புரோக்கா்களிடமிருந்தும் மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 500 கைப்பற்றினா். இவை அனைத்தும் கணக்கில் இல்லாத பணம் என்று தெரியவந்தது.
இதையடுத்து செங்கல்பட்டில் உள்ள சப்-ரிஜிஸ்தாா் தனுமூா்த்தியின் வீட்டில் நேற்று இரவு 9 மணியிலிருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனை நடத்தினா். இதையடுத்து அவருடைய வீட்டில் படுக்கைக்கு அடியிலும், சமையல் அறை உள்ளிட்ட இடங்களிலும் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்த பணக்கட்டுகளை பறிமுதல் செய்தனா். அதோடு பீரோ மற்றும் லாக்கா்களில் மறைத்து வைத்திருந்த பெருமளவு தங்க நகைகளையும் கைப்பற்றினா்.
சப்-ரிஜிஸ்தாரின் வீட்டிலிருந்து மொத்தம் 11 லட்சத்து 55 ஆயிரத்து 400 ரூபாயை கைப்பற்றினா். அதோடு அவருடைய வீட்டிலிருந்து 114 சவரன் தங்க நகைகளையும் கைப்பற்றினா். அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டிலிருந்து ரூ.13,30,900 பணமும், ரூ.50 லட்சம் மதிப்புடைய தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் கணக்கில் இல்லாத பணம் என்று கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு தனிப்படையினா் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!