Tamilnadu
மலிவான விலையில் உணவு - மருந்துகள் வழங்கி சேவை செய்த சமூக சேவகர் ‘சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்’ காலமானார்!
கோவை சாந்தி சோசியல் நிர்வாக இயக்குனர் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) காலமானார். 1972ல் ஒரு லேத் பட்டறை வைத்து தொழில் துவங்கிய இவர், ஜவுளி உதிரி பாகங்கள் தயாரித்தவர், இஸ்ரோவிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார். இவருடைய சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்தவர்.
பின்பு 1996ல் சாந்தி சோஸியல் சர்வீசை உருவாக்கினார். இதன் மூலம் மருத்துவமனை, மருந்தகம், உணவகம், பெட்ரோல் பங்குகள் மூலம் சேவையாற்றிவர், தினமும் 300 வயதானவர்களுக்கு இலவச உணவும், மற்ற அனைவருக்கும் 30 ரூபாய்க்கு தரமான உணவுகள், சிற்றுண்டிகள் வழங்கினர்/
அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 30 சதவீதம் தள்ளுபடியுடன் மருந்துகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, பெட்ரோல் விற்பனையிலும் அதன் ஸ்டாக் விலையிலேயே விற்பனை செய்தார். எனவே, இவரது நிறுவனங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பாராட்டப்பட்டவர். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள கூடாது என ஊடகங்களில் கடைசி வரை முகத்தை காட்டுவதில்லை என உறுதியாக இருந்த அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரின் மறைவு கோவை மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!