Tamilnadu
தமிழகத்தில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் பதிவாகும் கொரோனா பலி எண்ணிக்கை... புதிதாக 1,428 பேர் பாதிப்பு!
தமிழகத்தில் புதிதாக 68 ஆயிரத்து 388 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,428 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அதில், சென்னையில் 397, கோவையில் 142, சேலத்தில் 99, செங்கல்பட்டில் 83, திருவள்ளூரில் 65, காஞ்சியில் 61, திருப்பூரில் 55 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதனையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக உயிரிழப்போரின் எண்ணிக்கை மீண்டும் இரட்டை இலக்கில் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் அரசு மருத்துவமனையிலும் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் மேலும் 11 பேர் பலியானதை தொடர்ந்து மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல புதிதாக 1,398 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்கள். அதனையடுத்து இதுவரையில் கொரோனா பாதிப்பில் இருந்து 7 லட்சத்து 62 ஆயிரத்து 15 பேர் மீண்டிருக்கிறார்கள். தற்போது 10 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!
-
“விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
கூச்சமில்லாமல் செய்யப்படும் தமிழர் விரோதம் - கிடப்பில் போடப்பட்ட கீழடி அறிக்கை : முரசொலி!