Tamilnadu
“கரித்தூள் சாம்பல்... தவிக்கும் மக்கள்” - மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தி.மு.க எம்.பி கடிதம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை புகையிலிருந்து கரித்தூள் சாம்பல் வெளிவருவதை தடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் , சங்கராபுரம் வட்ட நகை வியாபாரிகள் சங்கம், அனைத்து குடியிருப்போர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து அளித்த மனுவைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கும், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளாக வெளிவரும் புகையில் கரித்தூள் - சாம்பல் கலந்து மழைத்தூரல் போல் கொட்டுகிறது. இந்த கரித்தூள் சாம்பல் காற்றில் பரவிக் காற்று மாசடைகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பல்வேறு நோய்களுக்கு உட்படுகிறார்கள்.
மேலும் இந்த கரித்தூள் சாம்பல் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் அந்தத் தண்ணீரை குடிக்கவோ, குளிக்கவோ முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு கரித்தூள் சாம்பல் வெளிவருவதை தடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!