Tamilnadu
புதிதாக 2,115 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. ஒரே நாளில் 25 பேர் பலி.. தமிழகத்தில் தணியாத கொரோனா! #CovidUpdates
தமிழகத்தில் புதிதாக 76 ஆயிரத்து 574 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 2,112 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில், சென்னையில் மட்டுமே 565 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, கோவையில் 190, செங்கல்பட்டில் 148, திருவள்ளூரில் 120, காஞ்சியில் 97, திருப்பூரில் 81 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,347 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் மேலும் 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை 11 ஆயிரத்து 440 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். தற்போது 18 ஆயிரத்து 395 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!